ஜெயலலிதாவை விட ஓ.பி.எஸ் மோசம்!!

அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை எட்டு  மணிக்கு  பூவிருந்தவல்லிக்கு பிரசாரம் செய்ய வருவதாக கட்சியினர் அனைத்து ஏற்பாடு செய்திருந்தனர்.

பூந்தமல்லி சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தலைக்கு இருநூறு வீதம் கொடுத்து ஆட்களை ஏழரை மணிக்கே அழைத்து வந்தனர். 8 மணிக்கு பிரசாரத்திற்கு வரவேண்டிய ஓ பன்னீர்செல்வம் காலை 10 மணி ஆகியும் வரவில்லை. அப்போதுதான்  ஓ.பி.எஸ். காஞ்சிபுரத்தில் பிரசாரத்தில் இருந்தார். காலை 7.30 மணிக்கு வந்த பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், குழந்தைகள் முதியவர்கள் என  அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

கட்சியினர் உடனடியாக புதியதாக ஒரு பேனரை எடுத்து வந்து கட்டினர். அதில் காலை 10 மணிக்கு ஓ.பி.எஸ். வருவார் என்று அச்சிடப்பட்டு இருந்தது. மீதமிருந்த கொஞ்சம் பொதுமக்களும் தலைமேல் துணியைப் போட்டு ஓரமாக அமர்ந்து இருந்தனர். பத்து மணி ஆகியும் மீண்டும் ஓ.பி.எஸ். வரவில்லை. மீண்டும் 12 மணிக்கு வருவார் என்று தகவல் சொல்லப்பட்டது. ஆனால் அதுவரை பொதுமக்களுக்கு களைப்புத் தீர மேடையில் குத்தாட்டம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

மதியம் ஒன்று முப்பது மணிக்கு பூந்தமல்லி கரையான்சாவடி பகுதிக்கு வந்த  ஓ.பி.எஸ். சிறிது நேரம் மட்டும் மக்களிடத்தில் பேசிவிட்டு சென்றார். மக்கள் பெரும்பாலானோர் கலைந்து சென்று விட்டனர்.சில வயதானவர்களும் குழந்தைகளை எடுத்துவந்த பொதுமக்களும் தலைமீது துணியையும் அட்டைப்பெட்டியை கவிழ்த்த வண்ணம் உட்கார்ந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், `ஜெயலலிதா எவ்வளவோ பரவாயில்லை. பத்து மணி என்றால் 12 மணிக்கு வந்து விடுவார். ஆனால் எட்டு மணிக்கு வருவதாகச் சொன்ன ஓ.பி.எஸ். 5 மணிநேரம் கழித்து வருகிறார். இது அபத்தமானது ஜெயலலிதாவை விட ஓ.பி.எஸ். மிக மோசம்'' என்று முணுமுணுத்தனர். கூட்டத்திற்கு வந்த பாட்டி மற்றும்  வயதானவர்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் நொந்துபோய் வீட்டிற்கு திரும்பிச் சென்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.