திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார் மைத்திரி!!


தனிப்பட்ட பயணமாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதிக்குச் சென்றுள்ளார். இன்று (புதன்கிழமை) காலை திருப்பதிக்குச் சென்ற அவர், திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தில் விசேட வழிபாட்டில் ஈடுபட்டார். அங்கு ஆலய நிர்வாகத்தினர் அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். அதன்பின்னர் அவருக்கு வெங்கடாசலபதியின் ஒளிப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நிர்வாகத்தினருடன் இணைந்து அவர் ஒளிப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், பெப்ரவரி மாதம் திருப்பதிக்கு சென்றிருந்த அவர், 2016ம் ஆண்டு மீண்டும் அங்கு சென்று வழிப்பாட்டை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து மூன்றாவது முறையாக ஜனாதிபதி திருப்பதிக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.