பிரான்ஸில் தாமோதரகானம் பாடற் போட்டி!

பிரான்ஸில் 14.04.19 தாமோதரகானம் பாடற்-போட்டி, நடுவர்களாக ஈழ:: இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள்,திருமதி ஜெயதர்சினி சிவசங்கர் அவர்கள் (இசை ஆசிரியை ஜெர்மன் திருமதி மீரா நித்தியானந்தன் அவர்கள் (இசை ஆசிரியை ஜெர்மன்) சிறப்பாக பணியாற்றினார்கள்.
நிகழ்வும் சிறப்பாக அமைந்திருந்தது. மகிழ்பறை இசை ஓசையுடன் மங்களவிளக்கேற்றல். நடனங்கள் ::: பிரதம விருந்தினர் :திருமதி ஜெயமணி இந்திரகுமாரன் முன்னாள்ஆசிரியை (கனடா) சிறப்பு விருந்தினர்கள் திரு.பாலகிருஷ்ணன் (தலைவர் Chc. Osta uk) திரு.கோவிந்தபிள்ளை சிறிகாந்தன் (தலைவர் CHC OSTA France) கௌரவ விருந்தினர் திரு.வில்லியன் சியா (மலேசியா வாழ் சீனத்தமிழன்) யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் சங்கம் பிரான்ஸ் நடாத்திய கரோக்கி இசை மூலம் பாடற்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. கீழ்ப்பிரிவு  1 இடம் செல்வி ஜீவராஜ் பிரியங்கீரா 2 வது இடம் செல்வி சத்தியநாதன் அமலியா 3வது இடம் செல்வி இதயமூர்த்தி வாசுகி மத்திய பிரிவு 1 வது இடம் செல்வி உதயகுலசிங்கம் உவானா 2வது இடம் செல்வி தெய்வேந்திரம் கரிகரணி 3வது இடம் செல்வி இதயமூர்த்தி அரோகரணா மேற் பிரிவு 1வது இடம் செல்வன் ரவீந்திரன் அலன்  2வது இடம் திரு.ஜெரால்ட் டிலிஸ் 3வது இடம் திரு.உருத்திரமூர்த்தி ஜெயக்குமார் இவர்களில் தாமோதரகானத்தின் தென்னகத்து தாரகை 2019 விருதை தன்வசமாக்கியவர்.செல்வி உவானா உதயகுலசிங்கம். :: தமோதரகானத்தின் உள்ளே! ::: பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்கள் உரை சீனத்தமிழனின் கரகாட்டம் இ.தமிழ் பழைய மாணவர் ஒன்றிய தலைவர் உரை (பிரான்ஸ்)  எழுச்சி நடனம்(சகாதேவி கலைக்கல்லூரி மாணவிகள்) மேலைத்தேய நடனம் (Bolly Express) சிறப்புரை கவிமாமணி கி.த.குகதாஸ் அவர்கள் (ஐரோப்பா ஆன்மீகப் பேச்சாளர்) இறுவெட்டு வெளியீடு தாயக நேரம் அமெரிக்க ஏலம் நல்வாய்ப்பு சீட்டிழுப்பு இப்படி பல நிகழ்வை சுவப்படுத்தின  நிகழ்வுகள் யாவற்றையும் ஆசிரியர் த.பரமேஸ்வரன் அவர்களும்  ஜேர்மனி மேடை, வானொலி அறிவிப்பாளர் திலகேஸ்வரன் அவர்களும் சிறப்புற தொகுத்து வழங்கினர்.(K.P.L)

No comments

Powered by Blogger.