ஹரி – மேகன் தம்பதியினரின் குழந்தை இப்படித்தான் இருக்குமாம்!

இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு பிறக்கவுள்ள குழந்தை இப்படித்தான் இருக்கும் என கணித்து இணையத்தளம் ஒன்று ஒளிப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.


ஹரி மற்றும் மேகனின் முக அம்சங்களைக் கொண்டு, பிறக்கும் குழந்தை எப்படி இருக்கும் என கணிக்கும் வகையில் அந்த ஒளிப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது ஹரியின் கண்களையும் மேகனின் தலைமுடியையும் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஹரியின் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என பந்தயம் கட்டும் அமைப்பு ஒன்று பந்தயத்தையே நிறுத்தியுள்ளது.

பெரும்பாலானோர் ஹரி மேகனுக்கு பிறக்கும் குழந்தை பெண்ணாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கே வந்து விட்டதால் இந்த முடிவை அந்த நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.