பேருந்தை கடத்தி பயணிகள் கொல்லப்பட்டனர்!

பாகிஸ்தானில் பேருந்தொன்று கடத்தப்பட்டு அதில் பயணித்த 14 பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இரு பயணிகள் தப்பிச்சென்றுள்ளனர்.


கராச்சியிலிருந்து கவதாருக்கு பயணித்த குறித்த பேருந்து இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் காணாமல் போனது. இந்நிலையில், குறித்த பேருந்தை கடத்திய துப்பாக்கிதாரிகள் 14 பயணிகளை சுட்டுக்கொன்றுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேருந்தை கடத்தி அங்கிருந்த பயணிகளை தெரிவுசெய்து கொன்றதாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் எந்த அடிப்படையில் பயணிகளை தெரிவுசெய்தார்கள் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் துணை இராணுவப் படையினரைப் போல சீருடையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தப்பிச் சென்ற இரு பயணிகளும், பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சரணடைந்தனர். அங்கிருந்து வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இது மிகவும் வெறுக்கத்தக்க செயலென தெரிவித்துள்ள மாகாண உட்துறை அமைச்சர் மிர் சியா லங்கோவ், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை ஒழிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்கு பிரதமர் இம்ரான்கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத குழுவும் உரிமைகோரவில்லை. தென்மேற்கு பலுசிஸ்தானில் பிரிவினைவாத குழுக்களும் ஐ.எஸ். போராளிக் குழுக்களும் இயங்கி வருகின்றன. குறித்த இரு குழுக்களும் எதிர்த்தரப்பிலுள்ள பொதுமக்களை குறிவைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவில் 20 பேரை கொன்ற குண்டுத்தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.