ஐநா செயலரின் பிரதிநிதிகளில் ஒருவராக சுமந்திரன்!!

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.


ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்றது.

இந்த அமர்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

தென்னாசிய பிராந்தியத்தில் திடீரெனப் பிணக்குகள் உருவாகுகின்றபோது, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளாக அவற்றைக் கையாளும் தகுதியுடையோரை ஐ.நா. செயலாளர் நாயகம் தேர்ந்தெடுத்துள்ளார்.

ஆப்கானில்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு, இலங்கை, பூட்டான் உட்பட பத்து நாடுகளில் இருந்து சுமார் 25 பிரமுகர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் தமது பிரதிநிதி அந்தஸ்துடன் தெரிவு செய்துள்ளார். அவர்களுக்கான கருத்தாடல் அமர்வே தற்போது நேபாளத்தில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையிலிருந்து எம்.ஏ.சுமந்திரனும், முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசமும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தேவைப்படும் அவசர வேளையில் தமது பிரதிநிதியாகச் செயற்படுவதற்குரிய பிரமுகர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தனது சொந்த இனத்துக்காக பாடுபடாமல் அந்த இனத்தை எட்டி உதைத்தவிட்டு மேற்குலக கைக்கூலியாக செயற்படும் சிறீலங்காவின் தற்போதைய ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் கைக்கூலியாக செயற்படும் சுமந்திரனுக்கு ஐநா வழங்கிய அன்புப்பரிசாகவே இதை கருதமுடியும்.

தனது இனத்துக்குள் புரையோடிப்போயிருக்கிற எழுபது வருட பிரச்சனையை தீர்க்க வக்கின்றி அதை ஒரு பிரச்சனையாகவே கருதாத சிறீலங்கா அரசாங்கமும் அதற்கு துணைபோய்க்கொண்டிருக்கின்ற மேற்குலகின் கைப்பொம்மையான ஐநாவும் சுமந்திரனை தென்னாசியாவின் ஏனைய நாடுகளின் பிணக்குகளை தீர்க்க அழைப்பது வேடிக்கையானது.குறிப்பாக சர்வதேச விவகாரங்களை கையாள நியமிக்கப்படுகின்ற ஒருவர் முதலில் தனது சொந்த நாட்டில் முதலில் முக்கிய இனத்துவ பிரச்சனைகளை சிறந்த முறையில் கையாண்டு தீர்வு கண்டவராக இருக்கவேண்டும்.

ஆனால் தமிழினத்தின் இனப்பிரச்சனை இனப்படுகொலை விவகாரம் என்பவற்றை குழிதோண்டிப்பதைத்துவிட்டு மேற்குலக பிராந்திய நலனுக்கான அக்கறையுடன் செயற்படும் தரப்போடு சேவகம் செய்யக்கூடிய ஒரு அடிமையை சுமந்திரன் வடிவில் ஐநா கண்டுபிடித்திருக்கின்றது என்றே சொல்லே வேண்டும்.தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களோ.வறுமையும் கண்ணீரும் ஏக்கமும் நிறைந்த வாழ்க்கையோடு போராடி நலிந்துகொண்டிருக்கின்றார்கள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.