தாடி பாலாஜி மனைவி நித்யா டெல்லியில் போட்டி!!

பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியும், மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்கள். நித்யா சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ‘தேசிய பெண்கள் கட்சி’ யில் இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார். இது குறித்து நித்யா கூறியதாவது:- ‘காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருந்தேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்க போய் என்னை பற்றி அவதூறு பரப்ப பாலாஜி திட்டமிட்டு இருந்தார். டெல்லியில் எங்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளுக்கே போன் செய்து ‘அவள் எல்லாம் கட்சித் தலைவியா’ என்று கேட்டு பிரச்சினை செய்து இருக்கிறார். இவர் சொன்ன எதையும் கவனத்தில் கொள்ளாத எங்கள் கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில் போட்டியிட அறிவுறுத்தினார்கள். வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலாக வசிப்பது எனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. அதனால் சரி என்று சொல்லி விட்டேன். அடுத்த சில நாள்களில் டெல்லி போய் தேர்தல் வேலைகளை தொடங்கவேண்டும்.’’
Powered by Blogger.