என்னுடைய சிறந்த நண்பரைக் கரம்பிடித்திருக்கிறேன்! - மறுமணம் குறித்து எஸ்.எஸ்.மியூசிக் பூஜா நெகிழ்ச்சி!!

எஸ்.எஸ். மியூசிக்கின் க்யூட்டான தொகுப்பாளர் பூஜாவை நினைவிருக்கிறதா?
மிஸ். கோயம்புத்தூர், மிஸ். கேரளா ரன்னர் அப், மாடலிங் என்று வலம் வந்தவர். எஸ்.எஸ். மியூசிக்கில் வீடியோ ஜாக்கியான பிறகு, இவருடைய தென்னிந்திய முக வசீகரத்துக்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் கிடைத்தார்கள்.  ஒரு கட்டத்தில், தன்னுடைய சக வீடியோ ஜாக்கியான க்ரேய்க்கை காதல் திருமணம் செய்துகொண்டார்.  தமிழில், 'காதலில் சொதப்புவது எப்படி',  'நண்பன்', 'பீட்சா' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். பிக் பாஸ் தெலுங்கு ரியாலிட்டி ஷோவில் சீசன் இரண்டிலும் கலந்துகொண்டவர். இரண்டு வருடங்களுக்கு முன், பூஜாவும் க்ரேய்க்கும் விவாகரத்து செய்துவிட்டார்கள் என்று வதந்திகள் வந்துகொண்டிருந்த நிலையில், அவரே 'யெஸ், நான் என் கணவரைப் பிரிந்துவிட்டேன்' என்று வெளிப்படையாகச் சொன்னார்.

தானுண்டு, தன் சினிமா உண்டு என்று இருந்தவர், கடந்த 15-ம் தேதியன்று தன் நீண்டகால நண்பனான ஜானை மறுமணம் செய்திருக்கிறார். தம்பதியர் இருவரும் தங்களுடைய திருமணப் படத்தை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருக்கிறார்கள். பூஜா, தன்னுடைய இன்ஸ்டாவில், 'இது நடந்திருக்காவிட்டால் என்னுடைய இந்த வருட விஷூ புத்தாண்டு எனக்கு ஆனந்தமாக இருந்திருக்க முடியாது. இன்று என்னுடைய சிறந்த நண்பனைத் திருமணம் செய்துகொண்டேன்' என்று மகிழ்ச்சிப் பொங்க  தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார். பூஜாவின் காதல் கணவர் ஜான் கோக்கன், ஃபிட்னஸ் மாடல் கம் ஆக்டர். பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். இவர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ' என் விருப்பங்களுக்கு மதிப்பளிப்பதைப் போலவே உன் விருப்பங்களுக்கும் மதிப்பளிப்பேன். என்னுடைய நேரங்களை நிச்சயம் உன்னுடன் செலவழிப்பேன். இது சத்தியம்' என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்.

வாழ்த்துகள் தம்பதிகளே...
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.