விபத்தில் சிக்கி, ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த அரசு நடத்துனர்!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் அரசு போக்குவரத்து கழக நடத்துனராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் இவருடைய கால் முறிந்தது. இதனையடுத்து சிகிச்சைக்காக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று அவருடைய கால் முறிவிற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து தேனி தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெரியகுளத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு தனது வாக்கை பதிவு செய்தார்.
தனது ஜனநாயக கடமையை ஆற்றியது, மிகவும் மகிழ்ச்சியை தருவதாக முபாரக் அலி தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.