பெண்திலக அன்னை புன்னகையில்லா பூபதி..!

வீழா வாழ்வு
விலையில்லா உயர்வு

மங்காத திங்கள்
மாலையில்லா நெஞ்சம்

கெஞ்சாத ஓர்மம்
கிரீடமில்லா போர்

வாடிய வதனம்
வரட்சியில்லா புரட்சி

விடுதலைப் பார்வை
வீடில்லா நாடு

பெண்திலக அன்னை
புன்னகையில்லா பூபதி

நெஞ்சில் உரம்
நஞ்சில்லா வரம்

துஞ்சும் ஈற்றில்
தூக்கமில்லா துப்பாக்கி

தூசுபடிந்த இனத்தில்
மாசில்லா மா தவம்

நேற்றும் இன்றும் நாளையும்
பாடும் பூ பதியுன்னை பதித்தவாறே

-த.செல்வா-

No comments

Powered by Blogger.