யாழில் மூத்த ஊடகவியலாளரும் யாழ் ஊடக அமையத்தின் ஸ்தாபகருமான தயாபரன் விபத்தில் படுகாயம்!!

யாழ்ப்பாணத்தின் மூத்த ஊடகவியலாளரும் யாழ் ஊடக அமையத்தின் ஸ்தாபகருமான இரட்ணம் தயாபரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மோட்டார் சைக்கிலில் சென்ற அவரை பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கில் வந்த நபர் ஒருவர் மோதி தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை; புலம்பெயர் சமுகத்துடன் நடைபெறவிருந்த கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்கான உடுப்பிட்டிப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இந்த் விபத்தில் அவர் சிக்கியுள்ளார்.

விபத்துக்குள்ளாகி ஊடகவியலாளர் வீழ்ந்த போதிலும் அவரை மோதிய நபர் தனது மோட்டார் சைக்கிலை அங்கு நிறுத்தாமல் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த ஊடகவியலாளர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்திய சாலைக்கு கூட்டிச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ் தரப்புக்கள் இனி என்ன செய்யப் போகின்றோம் என்பது தொடர்பில் புலம் பெயர் அமைப்புக்களுடன் கலந்துரையாடலென்று இன்று மேற்கொள்ளப்பட இருந்த நிலையிலையே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Powered by Blogger.