மட்டக்களப்பில் கண்டன பேரணி!!

தமிழர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான பயணம்’ எனும் தொனிப்பொருளில் முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இந்த பேரணி இன்று (சனிக்கிழமை) காலை வாவிக்கரை பூங்காவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. அத்தோடு இப்பேரணி அரசடி சந்தியினூடாக மண்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை சென்றடையவுள்ளது. அங்கு விழிப்புணர்வு தெளிவூட்டலும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துத்துள்ளனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டும், நில வளத்தை சூரையாடும் கதிரவெளி இல்மனைட் கனியவள அகழ்வு மற்றும் கல்குடா எரிசாராயம் தொழிற்சாலையை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்தே இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பல்வேறு எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட பதாதைகளையும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்ததுடன் எதிர்ப்பு கோசங்களையும் எழுப்பினர்.

இந்த கண்டன பேரணியில் தமிழர் முற்போக்கு அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் உட்பட மாநகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், இளைஞர்கள், பொது அமைப்புகள் என பலர் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.