ஒரே ஓவரில் 27 ரன்கள் விளாசிய மொயீன் அலி!!

கொல்கத்தா ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து வெளியேறினார். பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 122 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணி கடைசி 5 ஓவர்களில் 91 ரன்கள் குவித்தது.  
குல்தீப் யாதவ்
பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், நிதிஷ் ராணா 85 ரன்களும் ரஸல் 65 ரன்களும் சேர்த்தனர். இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் இன்னிங்ஸின்போது கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவ் அழுத சம்பவம் நடந்தது. 16-வது ஓவரை குல்தீப் வீசினார். அந்த ஓவரில் பெங்களூரு வீரர் மொயீன் அலி, 3 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகள் உட்பட 27 ரன்களைக் குவித்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் மொயீன் அலியின் விக்கெட்டை வீழ்த்தினார். இருப்பினும் தனது ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்ததால் குல்தீப் யாதவ், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானது வெளிப்படையாகத் தெரிந்தது.
குல்தீப் யாதவ்
மொயீன் அலியின் விக்கெட்டைக் கொண்டாட குல்தீப் யாதவ், ஓவர் முடிந்தவுடன் நடுவரிடம் இருந்து தனது தொப்பியை வாங்கி அதை தரையில் வீசியெறிந்து பின்னர் எடுத்தார். நடுவர் டைம் அவுட் அறிவிக்க, பௌண்டரி லைனை நோக்கிச் சென்ற குல்தீப்பின் கண்கள் கலங்கின. சக வீரர்களான கிறிஸ் லின், ரஸல், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் அவரைத் தேற்றினர்.
குல்தீப் யாதவ்
இருப்பினும் பௌண்டரி லைனை ஒட்டி மண்டியிட்ட நிலையில் அவர் அழத் தொடங்கினார். இதையடுத்து, கொல்கத்தா அணியின் மற்ற வீரர்களும் வந்து அவரைச் சமாதானப்படுத்தினர். இந்தச் சம்பவம் கொல்கத்தா ரசிகர்களை சோகமடையச் செய்தது. `கிரிக்கெட் விளையாட்டுல இதெல்லாம் சகஜம் பாஸு. இதற்கெல்லாம் வருத்தப்படாதீங்க' என்கிறரீதியில் நெட்டிசன்களும் குல்தீப் யாதவுக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.