பாண்ட்யா, ராகுலுக்கு அபராதம் விதித்த பிசிசிஐ!!

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்குத் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், தனியார் சேனல் ஒன்றில் `காபி வித் கரண்’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திவருகிறார். இதில், பல்வேறு துறை பிரபலங்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் மட்டுமல்லாது, பெர்சனல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின்போது, பெண்கள் குறித்து பாண்ட்யா பேசியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
இதனால், ஆஸ்திரேலியத் தொடரிலிருந்து பாதியில் இருவரும் திரும்ப அழைக்கப்பட்டனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி டி.கே.ஜெயின் விசாரித்தார். சர்ச்சைகளுக்குப் பின்னர் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் கலந்துகொண்ட காபி வித் கரண் எபிசோடை ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் நீக்கிவிட்டனர். 
பாண்ட்யா
இந்த நிலையில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்குத் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த விசாரணை அதிகாரி டி.கே.ஜெயினின் உத்தரவில், `தனியார் டி.வி  சேனலில் பெண்கள் குறித்து அவதூறு கிளப்பும் வகையில் அவர்கள் தெரிவித்த கருத்துக்காக இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதில், ரூ.10 லட்சத்தை பல்வேறு சம்பவங்களில் தங்களின் உயிரைத் தியாகம் செய்த துணை ராணுவப் படையினர் 10 பேரின் குடும்பங்களுக்கு இருவரும் தலா ஒரு லட்ச ரூபாயை அளிக்க வேண்டும். மீதமுள்ள ரூ.10 லட்சத்தை பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் உருவாக்கியுள்ள வைப்பு நிதிக்கு அளிக்க வேண்டும். இந்தத் தொகையை இருவரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் (19.4.2019) இருந்து 4 வார காலத்துக்குள் அளிக்க வேண்டும். தங்களின் செயலுக்கு இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருப்பதால் அவர்கள் மேல் வேறு எதுவும் நடவடிக்கை எடுக்கப்படாது'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.