தேர்­த­லில் தமிழ் வேட்­பா­ளர் கள­மி­றங்­கு­வது சிங்­க­ளப் பேரி­ன­வா­தத்­துக்கே வெற்றி!!

அரச தலை­வர் தேர்­த­லில் தமிழ் வேட்­பா­ளரை நிறுத்தி சிங்­க­ளத் தலை­வர்­க­ளுக்கு தமிழ் மக்­க­ளின் வாக்­கு­கள் செல்­வதை தடுப்­ப­தற்கு மேற்­கொள்­ளும் முயற்­சி­க­ளால், சிங்­கள பௌத்த பேரி­ன­வா­தி­க­ளின் சார்­பில் நிறுத்­தப்­ப­டும் ஒரு­வரே வெற்­றி­பெ­று­வார் என்று நவ­ச­ம­ச­மா­ஜக் கட்­சி­யின் தலை­வர் கலா­நிதி விக்­ர­ம­பாகு கரு­ணா­ரத்ன எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார். கொழும்­பி­லுள்ள நவ­சம சமா­ஜக் கட்­சி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஊடக சந்­திப்­பில் அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சிங்­க­ளப் பேரி­ன­வா­தத்தை மீண்­டும் தூண்­டி­விட்டு அத­னூ­டாக வாக்­கு­க­ளைப் பெற்று அரச தலை­வ­ரா­க­லாம் என்ற கனவு தற்­போது நிறை­வே­றாது என்ற நிலமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. சிங்­கள பௌத்த பேரி­ன­வாத சிந்­த­னை­யு­டைய ஒரு­வரை அரச தலை­வர் தேர்­த­லில் நிறுத்­தி­னால் வெற்­றி­பெற முடி­யும் என்ற நம்­பிக்­கை­யில் மகிந்­த­வாதி உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர்.
அத­னால் ‘நூதன துட்­ட­கை­முனு’ ஒரு­வரை நிறுத்த திட்­ட­மிட்­டுள்­ள­னர். போரை முடித்­தோம், நாட்­டைப் பிரிக்­கின்ற போராட்­டத்தை அழித்­தோம், அத­னால் நாட்­டைக் காப்­பாற்­றிய எங்­களை வெற்­றி­பெ­றச் செய்­யுங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் வாக்­கு­களை கேட்­கும் திட்­டத்­தில் அவர்­கள் இருக்­கின்­றார்­கள்.

அதற்­காக யார் போட்­டி­யி­டு­வது? மறு­பக்­கம் அரச தலை­வர் சிறி­சேன மீண்­டும் போட்­டி­யிட எதிர்­பார்க்­கின்­றார். கூட்­ட­ணிப் பேச்­சுக்­கள் நடத்­தப்­பட்டு வரு­கின்ற நிலை­யில் சிங்­கள வாக்­கு­க­ளைப் பெறும் ஒரு­வரை நிறுத்­து­வது பற்றி இன்­ன­மும் முடி­வெ­டுக்­க­வில்லை. ஆனால் சிங்­கள பேரி­ன­வாதி ஒரு­வரை நிறுத்­தி­னா­லும் இன்று வெற்­றி­பெற முடி­யாத நிலை உரு­வா­கி­யுள்­ளது.
70 வீதம் சிங்­கள மக்­கள் உள்­ள­தோடு அதில் 5 வீதத்­தி­னர் கிறிஸ்­த­வர்­கள்.

65 வீதமே துட்ட கைமு­னுவை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இன­வா­தத்தை தூண்டி ஏமாற்­றக்­கூ­டிய சிங்­ள­வர்­கள் இருக்­கின்­ற­னர். சிங்­கள மக்­களை மாத்­தி­ரம் நம்பி நிறுத்­தப்­ப­டும் வேட்­பா­ளர், தமிழ், முஸ்­லிம் மக்­க­ளின் வாக்­கு­க­ளின்றி வெற்­றி­பெற வேண்­டு­மா­னால் 50 வீதத்­துக்­கும் அதி­க­மான வாக்­கு­களை பெற வேண்­டும். இது மிக­வும் கடி­ன­மா­ன­தாக இருக்­கும்.


கடந்­த­கால தேர்­தல்­க­ளில் மகிந்த ராஜ­பக்ச தமி­ழர்­கள் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளின் வாக்­கு­களை இடை­ம­றித்தே வெற்­றி­பெற்­றார். இம்­மு­றை­யும் மகிந்த, தமி­ழர் ஒரு­வரை அரச தலை­வர் தேர்­த­லில் வேட்­பா­ள­ராக நிறுத்தி தமிழ் மக்­க­ளின் வாக்­கு­க­ளைச் சித­ற­டிக்­கச் செய்து சிங்­கள மக்­க­ளின் வாக்­கு­க­ளைப் பெற்று வெற்­றியை சுவீ­க­ரிக்க முயற்­சிக்­கின்­றார்.

இன்­றும் விடு­த­லைப் புலி­க­ளின் பிரி­வி­னை­ வாதக் கொள்கை கொண்ட சிலர், பிரிந்தே வாழ வேண்­டும் என்ற சிந்­த­னை­யு­ டன் இருக்­கின்­ற­னர். அப்­ப­டி­யான ஒரு­வர்­தான் எனது நண்­ப­ரான சிவா­ஜி­லிங்­கம். அவர் இதற்கு முன்­ன­ரும் மகிந்த ராஜ­பக்ச வெற்­றி­பெ­று­வ­தற்கு உத­வி­ய­வர். தமிழ் மக்­க­ளின் வாக்­கு­களை திசை திருப்பி ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­ன­ருக்கு அதி­கா­ரம் சென்­ற­டை­ய­வதை தடுப்­ப­தற்கு நினைக்­கின்­றார்.

அதற்­காக வட­மா­காண முன்­னாள் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரனை தேர்­த­லில் நிறுத்­த­வுள்­ள­தா­க­வும் அறி­ய­மு­டி­கின்­றது. இத­னூ­டாக பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் உத­வி­யைப் பெற­மு­டி­யும் என்­றும் எதிர்­பார்க்­கின்­ற­னர். ஆனால் விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தப் போராட்­டத்தை தோற்­க­டிப்­ப­தற்­காக இந்­தி­யா­வும் – அமெ­ரிக்­கா­வுமே உத­வி­யதை அவர்­கள் மறந்­து­விட்­டார்­கள்.

தமிழ் மக்­க­ளின் நீதிக்­காக அவர்­கள் ஜெனி­வா­வில் குரல் கொடுத்­தா­லும் அமெ­ரிக்­கா­வும், இந்­தி­யா­வும் விடு­த­லைப் புலி­களை தடை­செய்­யப்­பட்ட தீவி­ர­வாத அமைப்­புப் பட்­டி­ய­லில் சேர்த்து அழிக்க வேண்­டும் என்று செயற்­பட்­ட­வர்­கள். இன்­றும் அவர்­கள் அதே நிலைப்­பாட்­டி­லேயே உள்­ள­னர். விடு­த­லைப் புலி­க­ளின் நிலைப்­பாட்­டின் ஊடாக தமிழ் மக்­க­ளின் போராட்­டத்­தில் குறைந்த பட்­சம் பிரிந்து செல்ல வேண்­டும் என்று நினைத்­தால் அது ஒரு­போ­தும் சாத்­தி­யப்­ப­டாத ஒன்­றா­கும்.

அதற்கு எதி­ராக செயற்­பட்­ட­வர்­கள்­தான் இந்­தி­யா­வும் அமெ­ரிக்­கா­வு­மா­கும். ஆகவே அப்­ப­டி­யான வேட்­பா­ளர் ஒரு­வரை நிறுத்தி வாக்­கு­களை சித­ற­டிக்­கச் செய்து முற்­போக்கு வேட்­பா­ளர் ஒரு­வரை தோற்­க­டிக்க முடி­யும் என்று நினைத்­தால் அது­வும் சாத்­தி­யப்­ப­டாது போலி­யான முயற்­சி­யா­கவே அமை­யும் -– என்­றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.