தெல்லிப்பழை மருத்துவமனையில்- அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு!!

யாழ்ப்பாணம்  தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் பொது மருத்துவ நிபுணர் அம்பலவாணர் ரகுபதி ஞாபகார்த்தமாக சீரமைப்புச் செய்யப்பட்ட அவசர சத்திர சிகிச்சைப் பிரிவு நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது.


லண்­டன் ‘அப­யம்’ அமைப்­பின் நிதி­யு­த­வி­யு­டன் அது சீர­மைக்­கப்­பட்­ட­தோ­டு­ஒரு தொகுதி உப­க­ர­ணங்­க­ளும் வழங்கி வைக்­கப்­பட்­டன. மருத்­து­வ­மனை அத்­தி­யட்­ச­கர் மருத்­து­வர் யோ.திவா­கர்­த­லை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில், ரகு­ப­தி­யின் துணை­வி­யார் வதனி மற்­றும் பிள்­ளை­கள் இணைந்து அந்­தப்­பி­ரி­வைத் திறந்து வைத்­த­னர். ‘அப­யம்’ அமைப்­பின் நிர்­வாக உறுப்­பி­ன­ரும் ஆஸ்­தி­ரே­லிய புற்று நோய் மருத்­துவ நிபு­ண­ரு­மான மருத்­து­வர் திரு­மதி யசோதா சண்­மு­க­ராஜா யாழ்ப்­பா­ணப் பிராந்­திய சுகா­தார சேவை­கள் பணிப்­பா­ளர் ஏ. தேவ­நே­ச­னி­டம் உப­க­ர­ணங்­களை வழங்­கி­னார்.

வைத்தியர் ரகு­பதி தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றி­ய­போது, யாழ்ப்­பா­ணப் போதனா மருத்­து­வ­ம­னைக்கு நிக­ரான அவ­சர சிகிச்­சைப் பிரிவு ஒன்று தெல்­லிப்­பழை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று லண்­டன் ‘அப­யம்’ அமைப்­பி­ன­ரி­டம் தொடர்ச்­சி­யா­கக் கோரிக்கை விடுத்து வந்­த­தன் பய­னாக சுமார் 4 மில்­லி­யன் ரூபா நிதி­யு­த­வி­யில் அவ­சர சிகிச்­சைப் பிரிவு சீர­மைப்­புச் செய்­யப்­பட்­டது.

நிகழ்­வில் போதனா மருத்­து­வ­ம­னைப் பணிப்­பா­ளர் ம­ருத்­து­வர் த.சத்­தி­ய­மூர்த்தி , மருத்­து­வர்­க­ளான எம். உமாசங்கர், முரளி வல்லிபுரநாதன் மற்றும் மருத்துவர்கள், தாதிய அலுவலர்கள், நிர்வாக அதி காரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.