கிளிநொச்சி ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடியது!

இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பொதுமக்களை இலக்கு வைத்த தீவிரவாதக் குண்டுத் தாக்குதலை அடுத்து நாண்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை அடுத்து கிளிநொச்சி நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

உயிர்த்த ஞாயிறான இன்றைய தினம் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்புத் தேவாலயம் போன்ற தேவாலயங்களில் பொதுமக்கள் தமது மத அனுட்டானங்களில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களை இலக்கு வைத்து மிகவும் கோழைத்தனமான முறையில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களால் பச்சிளம் பாலகர்கள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் எனப் பலரும் அநியாயமாகக் கொல்லப்பட்டதை அடுத்து, நாட்டின் சில இடங்களில் தாக்குதல்தாரிகளான தீவிரவாதிகள் நடமாடிய வேளை பிடிபட்டதை அடுத்து நாட்டில் இன்றைய தினம் மாலை 4.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி நகரமும் வெறிச்சோடியது.
வீதிகளில் மக்கள் நடமாட்டமற்றும் கிளிநொச்சி நகர் பொதுச் சந்தை வர்த்தகர்கள் அவசர அவசரமாகத் தமது வர்த்தக நிலையங்களைப் பூட்டிவிட்டு வெளியேறிச் சென்றதனையும் அவதானிக்க முடிந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboNo comments

Powered by Blogger.