வெங்கட் பிரபுவின் வில்லன் லுக்!

வெங்கட் பிரபு இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவரும் நிலையில் தற்போது முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.கே. நகர் படத்தைத் தொடர்ந்து வைபவ் காவல்துறை அதிகாரியாக புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக சின்னத்திரையில் கவனம் பெற்ற வாணி போஜன் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். இவர் இயக்குநர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நிதின் சத்யா இந்தப் படத்தை தயாரிக்க, பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காவல் துறை சம்பந்தப்பட்ட சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் வெங்கட் பிரபு வில்லனாக வலம் வரவுள்ளார். ஆர்.கே. நகர் படத்தைத் தயாரித்திருக்கும் வெங்கட் பிரபு சில காரணங்களால் அதன் ரிலீஸ் தள்ளிப்போவதாக சமீபத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தார். அடுத்ததாக சிம்புவை கதாநாயகனாகக் கொண்டு `மாநாடு' படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து, அஜித்துடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவும் பேச்சு வார்த்தையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.