வடக்கு கிழக்கில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்-மாவை!


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழல் தொடரலாம் என அஞ்சப்படுகின்ற நிலையில், வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வடக்கு ஆளநரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவிட்ட புருத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்துள்ளதுடன் பாதுகாப்புக்களும் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். மேலும் எதிர்வரும் 24 ஆம் திகதி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று தற்கொலை குண்டு தாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிட்டு இந்த தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், சர்வதேச ரீதியில் விசாரணை செய்பவர்களின் துணையுடன் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.