கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதியால் பதற்றம்!!
கொழும்பு கொள்ளுபிட்டியை அண்மித்த பகுதியில் மர்ம பொதியொன்று காணப்படுவதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பகுதியில் தற்பொழுது குண்டு செயலிழக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்காரணமாக குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பு படையினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதரகமும் தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக இருக்குமாறு உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை