யாழில் தேசிய துக்க தினம் அனுஷ்டிப்பு!


நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களை அடுத்து,இலங்கையின் பலப்பகுதிகளில் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் தேசிய துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நல்லூர் ஆலயம்,தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள் மற்றும் அரசதினைக்களங்களின் உத்தியோகஸ்தர்கள் கலந்துக்கொண்டு மூன்று நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.