கோத்தாவின் கவலை!!

இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் வீழ்ச்சி பெரும் கவலையளிப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.


உலகின் முன்னணி புலனாய்வுப் பிரிவுகளுக்கு தரம் குறையாத புலனாய்வுப் பிரிவு கட்டமைப்பினை கொண்ட இலங்கை புலனாய்வு பிரிவு கண் எதிரிலேயே இழிவுபடுத்தப்படுவதனை கண்டு கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில்,

இலங்கையில் இடம்பெற்ற இந்த கோழைத்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான குண்டு தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடும்போக்குவாத தாக்குதலில் உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

சேதமாக்கப்பட்ட தேவாலயங்கள் மற்றும் ஏனைய சொத்துக்களை புனரமைத்து கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனைத்து இன, மத மக்களும் கௌரவமான முறையில் வாழக்கூடிய ஓர் நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய முதன்மைப் பொறுப்பு எமக்கு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

தாய் நாட்டுக்கு எதிரான எந்தவொரு சக்தியையும் எதிர்த்து நின்று போராட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.