பாதுகாப்பு கருதி வடமாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு இரத்து!!


வடமாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் வடமாகாண பேரவை கட்டடத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.கைதடி பகுதியில் அமைந்துள்ள வடமாகாண பேரவை கட்டத்தில் , முதலமைச்சர் அலுவலகம் , மாகாண சபை சபா மண்டபம், திணைக்களங்கள் அமைந்துள்ளன. அவற்றுக்கு தினமும் பல்வேறு தேவைகளுக்காக மக்கள் வந்து செல்வார்கள். அந்நிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக பேரவை கட்டடத்தை சூழ ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளை வடமாகாண ஆளுனரின் மக்கள் சந்திப்பு பிரதி புதன்கிழமைகளில் குறித்த கட்டடத்தில் நடைபெற்று வந்தன. நாட்டில் ஏற்பட்டு உள்ள அசாதாரண சூழ்நிலையால் மக்கள் சந்திப்பு இரத்து செய்யப்பட்டு உள்ளது.

No comments

Powered by Blogger.