களுபோவில வைத்தியசாலை பகுதிகளில் கைக்குண்டுகள் மீட்பு!!


கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் சந்தேகத்துக்கிடமான பொதி ஒன்று காணப்பட்டுள்ளதனையடுத்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைத்தியசாலையிலுள்ள நோயாளர் அவசரமாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர் எனவும்சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவே நோயாளர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை அநுராதபுரம் – தொரமடலாவ விகாரைக்கு அருகிலுள்ள வீதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக நபரொருவர் பரசன்கஸ்வெ​வ காவல்துறையினருக்கு வழங்கிய தக​வலையடுத்தே, குறித்த பகுதிக்கு உடனடியாக சென்ற விசேட காவல்துறை அதிரடி படையினர் அதனை மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. அத்துடன் கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், விமானப் படையின் குண்டு செயலிழக்கும் படையினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.