தமிழர் இனப்படுகொலை தொடர்பாக பிரம்டன் மாநகரசபை வெளியிட்ட பிரகடனம்!!

தமிழர் இனப்படுகொலை தொடர்பாக பிரம்டன் மாநகரசபை வெளியிட்ட பிரகடனத்தை மாநகரமுதல்வர் மதிப்பிற்குரிய பற்றிக் பிறவுண் முன்மொழிந்தார். மாநகரசபை உறுப்பினர் மதிப்பிற்குரிய பற் போட்டினி பிரகடனத்தை வழிமொழிந்தார்.


பத்து நகரசபை உறுப்பினர்களும் முழுமனதாக வாக்களிக்க, பிரகடனம் எதிர்ப்புகள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

பிரகடனத்தின் தமிழாக்கம் கீழே தரப்படுகின்றது.

பிரித்தானியர்கள் இலங்கைக்குப் 1948ல் சுதந்திரம் வழங்கினர். இதைத்தொடர்ந்து இலங்கையின் பெரும்பான்மையினத்தவர் ஆட்சியாளராகினர். இந்த ஆட்சியாளர்களால் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்ற தமிழர்கள், படுகொலை, நிலஆக்கிரமிப்பு, உடமைகள் அழிக்கப்படுதல் உட்பட்ட அறம் தவறிய முறைகேடுகளுக்கும் பாரதூரமான துன்புறுத்துதல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இந்தத் தமிழின அழிப்பின் ஓரங்கமாகவே '21ஆம் நூற்றாண்டின் தமிழர் இனஅழிப்பு' என்று அறியப்பட்ட, தமிழர்களுக்கு மிக மோசமான அனுபவமாக அமைமந்த இனப்படுகொலையை இந்த ஆட்சியாளர்கள் செய்து முடித்தனர்.

ஆயிரக்கணக்கான தமிழ்ப் புத்திஜீவிகள்;, அரசியல்வாதிகள், தமிழ் சார்ந்த மதத் தலைவர்கள் போன்றோர் கொலை செய்யப்பட்டும் கைதாகியும் துரத்தப்பட்டும் துன்பறுத்தப்பட்டனர். இவ்வாறான துயரங்களுடன் ஆரம்பமானதுதான் இந்தத் தமிழினவழிப்பு.

தொடர்ந்து இலங்கையினைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆட்சியாளர்கள், 1958 முதல் 2009 வரையான காலப்பகுதியில் சித்திரவதைகள் செய்தும் பட்டினியாலும் ஒரு இலட்சம் தமிழர்களைக் கொன்றனர். இந்தக் கொடிய கொலைகள் யாவும் திட்டமிட்டே நிறைவேற்றப்பட்டிருந்தன.

இதேவேளைதான் கனடாவிலிருந்து வெளிவரும் பிரதான பத்திரிகைகள் 'ரொறன்ரோவைத் தாக்கிய இன அழிப்பு'இ தமிழர் இனஅழிப்புக்கு ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு' 'இலங்கையின் கொலைக்களத்துக்கெதிராக உலகம் எவ்வாறு விடைகாணப்போகிறது?' போன்ற தலையங்கங்களைத் தாங்கி வெளிவந்திருந்தன.

மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களுக்கும் இழிவு படுத்தப்படுதலுக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தோர், வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டிருந்த பொழுதிலும்கூட வேண்டுமென்றே மனிதகுலத்துக்கெதிரான குற்றங்கள் இழைக்கப்படவில்லையென்றும் இனவழிப்பே நடந்தேறவில்லையென்றும் மறுதலிக்கிறார்கள். இத்தகைய மறுப்பானது வன்கொடுமைகளினால் பாதிக்கப்பட்டுத் தப்பிப் பிழைத்து மீண்டவர்களுக்குத் துன்பத்தைக் கொடுப்பதுடன் பாதிக்கப்பட்டோர் நினைவுகளைச் சீர்குலைத்தும் வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்டாதிருத்தல் மனவலியினையும் மன உளைச்சலினையும் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகளுக்குக் கொடுத்து வருகிறது.

யுத்தம் நடந்த காலத்தில் தப்பிப் பிழைத்த ஒருசிலர் மட்டும் அங்கு இடம்பெற்ற சொல்லொணாக் கொடுமைகள் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கான வரலாற்று உண்மையினை மீள்உறுதிப்படுத்தவல்ல, திடமான சான்றாகவும் இருக்கின்றனர். அவர்களுடைய தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது எமது கடமையாகும்.

அதேவேளை இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பெருந்தொகையான தமிழருக்குத் தாய்நாடாகக் கனடா இருக்கின்றது. அவர்களும் இந்த நாட்டைக் கல்வி, மருத்துவம், விவசாயம், அரசியல், கலை ஆகிய துறைகளில் முன்னிலை பெற்றுச் செழுமைப்படுத்தி வருகிறார்கள். கனடியக் குடிமக்கள் என்ற பெருமையுடனும் தேசப்பற்றுடனும் செயற்படுகிறார்கள்.

ஆகவே மேலே குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் பிரம்ரன் மாநகரசபை கீழ்க்காணும் பிரகடனத்தை முன்மாழிகின்றது.

➢(அ.) ஐ .நா. மனித உரிமைகள் பேரவையானது, இலங்கையால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்துக்கெதிரான குற்றச் செயல்களை அடையாளம் கண்டு கொண்டதையும்; ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையாளர், இலங்கையரசை அழைத்து, யுத்தக் குற்றங்கள், மனிதகுலத்துக்கெதிரான குற்றச்செயல், இனவழிப்பு, தொடர்பான சட்டங்களை இயற்றவேண்டுமென அண்மையில் கேட்டுக் கொண்டதையும் ஏற்க வேண்டும்.

➢(ஆ) இலங்கையின் தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்டது ஓர் இனவழிப்புதான் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

➢(இ) கடந்த 9 ஆண்டுகளாக மே மாதம் 18ந் திகதியைத் தமிழர் இன அழிப்பு நினைவுநாளாக நினைவு கூறப்படுதல் வேண்டும். இலங்கையில்; தமிழர் மீதான இனவழிப்பு, மனிதஉரிமை மீறல், நிலப் பறிப்பு, மனித உயிர் இழப்பு போன்றன நடைபெற்றிருக்கின்றன என்பது தொடர்பில் பிறருக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

➢(ஈ) அத்துடன் கனடாவின் உள்ளுராட்சி ஒன்றியத்துக்கும் ஒன்ராறியோ உள்ளுராட்சி சபைக்கும் பிறம்ரன் பகுதிச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மாகாணசபை அங்கத்தவர்களுக்கும் இப்பிரகடனத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படவேண்டும்.

PROCLAMATION DECLARING TAMIL GENOCIDE

Moved by: mayor patrick brown

Seconded by: councillor Pat Fortini

Passed. 10-0

WHEREAS, The Tamil people, living in their traditional homeland in North-East Sri Lanka, were subjected to severe persecution and injustice by the rulers of the Government of Sri Lanka after the independence Granted by British in 1948, including widespread massacres, usurpation of land and property, and acts of wanton destruction; and

WHEREAS, the horrible experience of the Tamils at the hands of their oppressors culminated in 2009 what is known as the ‘‘Genocide of the Twenty first Century;” and

WHEREAS, The Tamil Genocide began with the arrest, exile, and murder of thousands of Tamil intellectuals, and political, religious leaders; and

WHEREAS, the regime in control of Sri Lanka planned and executed the unspeakable atrocities committed against the Tamil people from 1958 through 2009, which included the torture, starvation, and murder of more than 100,000 Tamils; and

WHEREAS, newspapers in Canada commonly carried headlines such as “Toronto’s Hidden Genocide,” “Thousands protest Tamil Genocide,” and “How the world should react to Sri Lanka’s Killing Fields…”; and

WHEREAS, Unlike other peoples and governments that have admitted and denounced the abuses and crimes of predecessor regimes, and despite the overwhelming weight of evidence, adamantly denied the occurrence of the crimes against humanity and genocide, and those denials compound the grief of the remaining survivors of the atrocities, desecrate the memory of the victims, and cause continuing trauma and pain to the descendants of the victims; and

WHEREAS, the passage of time and the fact that few survivors remain who serve as reminders of indescribable brutality and torment, compel a sense of urgency in efforts to solidify recognition and reaffirmation of historical truth; and

WHEREAS, Canada has become home to one of the largest population of Tamils from Sri Lanka, and those citizens have enriched our country through leadership in the fields of academia, medicine, business, agriculture, government, and the arts and are proud and patriotic practitioners of Canadian citizenship;

Therefore Be It Resolved That the City of Brampton:

(a) Endorse the United Nations Human Rights Council’s (UNHRC) findings on Sri Lanka’s crimes against humanity and UNHRC HighCommissioner’s recent call for Sri Lanka to enact legislation to criminalize war crimes, crimes against humanity, genocide; and

(b) Recognize that these crimes against the Tamil Nation in Sri Lanka constitute a genocide; and

(c) Recognize that May 18th as Tamil Genocide Remembrance Day as commemorated by Tamil Canadians every year for the last 9 years; and to educate others about the tragic loss of life, land, and human rights of the Tamil Nation and the crimes of genocide committed against them; and

(d) Send a copy of this Resolution to the Federation of Canadian Municipalities (FCM), the Association of Municipalities of Ontario (AMO), and Brampton Members of Parliament (MPs) and Members of Provincial Parliament (MPPs).


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.