கேப்டனாக சதமடித்த தோனியைக் கொண்டாடும் சாக்ஷி!!
கேப்டானாக 100- வது ஐ.பி.எல் போட்டியை வென்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு, மனைவி சாக்ஸி தோனி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள 11 ஆட்டங்களில் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியைத் தழுவியது. மும்பை அணிக்கெதிரான முதல் தோல்வி, அடுத்து தோனியின் கேப்டன்ஷிப் இல்லாத எஸ்.ஆர்.ஹெச்சுக்கு எதிரான ஆட்டம். மற்றொன்று சமீபத்தில் பெங்களூர் அணியுடனான ஆட்டம். ஆர்.சி.பிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சி.எஸ்.கே. இப்படி களமாடிய பெரும்பாலான போட்டிகளில் சென்னை அணி வெற்றியைப் பதிவுசெய்வதற்கு, தோனி என்ற கேப்டன்தான் காரணம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேப்டனாக இதுவரை 3 ஐபிஎல் டைட்டில்களை வென்று கொடுத்துள்ளார். சாம்பியன் லீக் மற்றும் டி20 போட்டிகளில் இருமுறை வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, தோனி வெற்றிதேடித் தந்தார். கேப்டனாக ஐபிஎல் போட்டிகளில் தோனிக்கு, அது 100வது வெற்றியாகும். இதையடுத்து, தோனியை, `தல’ என்று அழைக்கும் அவரது ரசிகர்கள், கொண்டாடித் தீர்த்தனர். 100-வது வெற்றியை அங்கீரிக்கும் வகையில், சி.எஸ்.கே அணி நிர்வாகம், `Yellove 100' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட 100 விசில்கள் பதியப்பட்ட விருது ஒன்றை அளித்து தோனியைக் கௌரவப்படுத்தியுள்ளது. இந்த[ புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சாக்ஷி தோனி, ``வாழ்த்துகள் தல, விசில்போடு, உங்களுக்காக 100 விசில்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை