வவுனியாவில் கரடிகள் தாக்கி ஒருவர் படுகாயம்!


வவுனியா- ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலமோட்டையில் கரடிகளின் தாக்குதலினால், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 42 வயதுடைய சிவகுமார் என்பவரே, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், இன்று காலை வயல்வெளிக்கு சென்றுள்ளார். இதன்போது அருகிலிருந்த பற்றைக்குள் மறைந்திருந்த மூன்று கரடிகள் திடீரென தாக்கியுள்ளன. ஆனாலும் அவரும் கரடிகள் மீது தாக்குதல் நடித்தியதுடன் அவ்விடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்நிலையிலேயே சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.