அமெரிக்கா: ராப் பாடகர் சுட்டுக் கொலை!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பிரபல ராப் பாடகரும், 2019-ஆம் ஆண்டு கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவருமான நிப்ஸி ஹசல் பட்ட பகலில் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


ராப் இசைக் கலைஞரான நிப்ஸி ஹஸல்(33), லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள தனது கடைக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை பகலில் நின்று கொண்டிருந்தபோது, அவரை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
 இந்த சம்பவத்தில் நிப்ஸி ஹஸல் தவிர மேலும் இருவரும் காயமடைந்தனர். அதையடுத்து அருகில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், நிப்ஸி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து லாஸ் ஏஞ்சலீஸ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கருப்பினத்தை சேர்ந்த ஒருவர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
பாடகர்கள் இரங்கல்: நிப்ஸி ஹசல் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த பிரபல பாடகி ரிஹானா உள்பட பல பாடகர்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் நிப்ஸியின் குடும்பத்தினருக்கு தங்களது இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.