மட்டக்களப்பில் மினி சூறாவளி! பல வீடுகள் சேதம்!!
மட்டக்களப்பில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு - ஓட்டமாவடி, மஜ்மாநகர் கிராமம் மற்றும் ஆலங்குளம் பகுதியில் நேற்று மாலை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததோடு மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் மஜ்மாநகர் கிராமத்திலுள்ள ஸகாத் வீட்டுத் திட்டம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டம் என்பவற்றில் உள்ள 16 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மஜ்மா நகர் கிராமத்திலுள்ள சீமெந்து கல் வெட்டும் நிலையத்தின் கூரைத் தகடுகள் வீதியோரங்களில் காணப்படுவதோடு மரங்கள் நிலத்தில் வீழ்ந்துள்ளன.
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த போது மினி சூறாவளி வீசியதால் வீட்டில் இருந்த எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை