பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து! - சிறுவன் உடல் கருகி பலி!!
சோளிங்கரில், பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், சிறுவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வேலூர் மாவட்டம், சோளிங்கரை அடுத்த ஜம்புக்குளம் தொண்டமா நத்தம் கிராமத்தில், சசிக்குமார் (33) என்பவர் பரமசிவம் என்ற பெயரில் பட்டாசுத் தொழிற்சாலை நடத்திவருகிறார். இங்கு, வாலாஜா ஒட்டத்தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் சரவணன் (21) வேலை செய்துவருகிறார். கடந்த மூன்று நாள்களாக சரவணன் தனக்குத் தெரிந்த வாலாஜா திருமால் நகரைச் சேர்ந்த சதீஷ் (16) என்கிற சிறுவனையும் வேலைக்கு அழைத்துவந்திருக்கிறார். இந்த நிலையில், இன்று பட்டாசு குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்துச் சிதறின. பணியிலிருந்த சிறுவன் சதீஷ், உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன் கை, கால்களில் பலத்த தீக்காயத்துடன் குடோனிலிருந்து வெளியில் ஓடிவந்ததால் உயிர் பிழைத்தார். இதுபற்றி, சோளிங்கர் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். பலத்த காயமடைந்த சரவணனை மீட்டு, வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவ இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், டி.எஸ்.பி விஜயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சோளிங்கர் போலீஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை உரிமையாளர் சசிக்குமாரை கைதுசெய்து, தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கோரச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை