யாழில் கடை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்தில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கடை ஒன்றை உடைத்து சி.சி.ரி.வி. கமெராக்கள் மற்றும் அதனைப் பொருத்தும் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள பித்தளை, இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் கடந்த டிசெம்பர் மாதம் திருட்டுப் போயிருந்தன. எனினும் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு வழங்கப்படவில்லை.br />

No comments

Powered by Blogger.