டிக்டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை!!

டிக்டாக் செயலியை தரவிறக்கம் செய்வதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.


மேலும், தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து எதிர்வரும் 16ஆம் திகதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

டிக்டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவித்து அந்த செயலிக்கு தடைவிதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், குழந்தைகள், மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வயதினரும் இதனை பயன்படுத்துவதாகவும், இதனால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். டிக்டாக் செயலியை பயன்படுத்திய 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், பல்வேறு வழிகளில் தீமையை ஏற்படுத்தும்  டிக்டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த  மனுமீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளதால், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தை தம் நாட்டிலும் ஏன் அமுல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல், இதுபோன்ற செயலிகளை தடைசெய்ய அரசே உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

டிக்டாக் செயலியை முழுவதுமாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், டிக்டாக் எனப்படும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கும் அதை தொலைக்காட்சியில் வெளியிடவும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.