ஐபிஎல்: தாய் மண்ணில் வெற்றி பெற்றது மும்பை அணி! சிஎஸ்கே படுதோல்வி!!

மும்பையில் அன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 38 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
மும்பையில், இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிவின்டன் டி காக், ரோஹித் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். கிவின்டன் டி காக் 4 ரன்களில் அவுட் ஆனதையடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார்.
ரோஹித் சர்மா 13 ரன்களில் அவுட் ஆனதையடுத்து சூர்யகுமாருடன், யுவராஜ் ஜோடி சேர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக யுவராஸ் சிங் 4 ரனிகளிலேயே ஆட்டமிழந்தார். இதனால், சூர்யகுமார், க்ருனுல் பாண்ட்யா ஆகியோர் தொடர்ந்தனர்.
க்ருனுல் பாண்ட்யா 42 ரன்களுடன் வெளியேறினார். இதனையடுத்து, சூர்யகுமாரும், ஹாட்ரிக் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். ஆட்டம் சூடுபிடித்த நிலையில் 59 ரன்களுடன் சூர்யகுமார் ஆட்டமிழந்தார். இதனையடுத்து போலர்டு களம் இறங்கினார்.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவரில், 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது
171 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சென்னை அணி களம் இறங்கியது. ஷானே வாட்சன் 5 ரன்களுடனும், சுரோஷ் ராய்னா 16 ரன்களுடனும், அம்பாதி ராயுடு ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேதர் யாதவ், தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தோனி 12 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின்னர் கேதர் யாதவுடன் ரவீந்திர ஜடேஜா தொடருவார் என்ற நிலையில், ஒரு ரன் மட்டுமே எடுத்து ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்தார். அதன் பின்னர், கேதர் யாதவுடன் பிராவோ ஜோடி சேர்ந்தார். 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை எடுத்திருந்தது சென்னை அணி.
கேதர் ஜாதவ் 58 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து தீபக் சஹார் களம் இறக்கப்பட்டார். 18 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்தது. 12 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என இருந்தது.
இறுதியில், 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்து சென்னை அணி படுதோல்வி அடைந்தது. இதனால் 38 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India

No comments

Powered by Blogger.