நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார் ஜனாதிபதி!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(வியாழக்கிழமை) காலை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆசனத்தில் அமர்ந்து விவாதத்தை அவதானித்து வருவதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். பாதுகாப்பு, மகாவலி மற்றும் சுற்றுசூழல் அபிவிருத்தி அமைச்சு ஜனாதிபதியின் கீழ் செயற்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.