வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!


வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ரயில் நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். ரயில் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள், நிர்வாக மற்றும் ரயில் கண்காணிப்பு முகாமையாளர்கள் ஆகியோர் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில் நடவடிக்கை கண்காணிப்பு அதிகாரிகளின் தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் லால் ஆரியரத்ன கூறியுள்ளார். மேற்குறிப்பிட்ட தரத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையால் அனுமதியளிக்கப்பட்ட எம்.பீ. 1 மற்றும் 2 சம்பளம் வழங்குவது தொடர்ச்சியாக தாமதமாவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.