தொழில் பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கு நியூசிலாந்து உதவி வழங்க தயார்!!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழான திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்
பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கு நியூசிலாந்து பல்வேறு உதவிகளை வழங்குமென அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் ஜோயன்னா கெம்ப்கெர்ஸ் தெரிவித்துள்ளார்
.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

திறன் அபிவிருத்தி அமைச்சின் மூலம் இளைஞர்களினதும், யுவதிகளினதும் திறன்களை வளர்ப்பதற்கும் அதன் மூலம் தொழில் இல்லாத பிரச்சினைகளை குறைப்பதற்கும் நியூசிலாந்து உதவ வேண்டும் என அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உயர்ஸ்தானிகர், நியூசிலாந்து இலங்கைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நியூஸிலாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம், கவலையளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தவுடன் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும், சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீது காட்டிய பரிவு எமக்கு ஆறுதல் அளிக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமரின் இந்த உடனடி செயற்பாடுகளையும் அவரது துணிச்சலையும் இலங்கையர்களாகிய தாம் பாராட்டுவதோடு நன்றிகளையும் தெரிவிக்கின்றோமென இந்த சந்திப்பின்போது அமைச்சர் ரிஷாட், உயர்ஸ்தானிகர் ஜோயன்னா கெம்ப்கெர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் நியூஸிலாந்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் முற்காப்பு நடவடிக்கைகளும், விழிப்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாட் உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.