இழப்பீட்டுப பணியக ஆணையாளராக ரத்னபிரிய!!

நல்லிணக்கப் பொறிமுறைகளில் ஒன்றான, இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியகத்தின் ஆணையாளர்களுக்கான நியமனங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

தாரா விஜயதிலக, கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன், செல்லத்தம்பி சுமித்ரா, ஏஏஎம் பதிஹூ, லெப்.கேணல் ரத்னபிரிய பந்து ஆகியோர் இழப்பீட்டுப் பணியகத்துக்கான ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு பேரவையின் பரிந்துரைக்கமைய, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்கள் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திறந்த மற்றும் போட்டி செயல்முறைகளின் மூலம், இந்த ஆணையாளர்களை அரசியலமைப்பு பேரவை தெரிவு செய்ததாக நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஒருங்கிணைப்புச் செயலகம் தெரித்துள்ளது.

இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்குவதற்கும், அதனை அதிகாரிகளை நியமிப்பதற்குமாக 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், 700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் நோக்கில் இந்தப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஆணையாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ள கேணல் ரத்னபிரிய பந்து, விசுவமடுவில் சிவில் பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் என்பதும், வடக்கில் மாற்று அரசியலை முன்னெடுக்க தயாராக இருப்பதாக கடந்தவாரம் தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கூறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.