யோகி பாபுவை புகழும் யாஷிகா!

நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவந்த யோகிபாபு தற்போது பிஸியான கதாநாயகனாக வலம் வருகிறார். இவரோடு இணைந்து நடித்த அனுபவம் குறித்து யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார்.


தமிழின் முதல் ஸோம்பி காமெடி வகைப் படமான இதற்கு ஸோம்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது. புவன் ஆர் நுல்லன் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ஐஸ்வர்யா ராஜேஷ், சுரேஷ் ரவி இணைந்து நடித்த மோ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு இ.சி.ஆரிலுள்ள ஒரு ரிஸார்ட்டில் நடைப்பெற்று முடிந்தது. படத்திற்கு பிரேம் ஜி அமரன் இசையமைக்கிறார்.

இதில் டாக்டராக யாஷிகா ஆனந்த் வேடமேற்றிருக்கிறார். படத்தில் யோகி பாபுவிடம் தான் இணைந்து நடித்த அனுபவத்தை பற்றி தன்னுடைய ட்விட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். யோகி பாபுடன் நடித்தது தனக்கு மகிழ்ச்சியாகவும், அவரது நகைச்சுவைக்கும் அர்ப்பணிப்புக்கும் தான் ரசிகை ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் யோகி பாபு ஒரு அற்புதமான மனிதர் என்றும் புகழ்ந்துள்ளார்.
படத்தின் க்ளைமேக்ஸுக்கு முந்தைய ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.