பாலிவுட்டுக்கு போகும் தடம்!


அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான தடம் திரைப்படம் ‘சைலண்ட் ஹிட்’ அடித்தது. தற்போது இப்படம் பாலிவுட்டுக்கும் செல்லவுள்ளது.
அருண் விஜய்க்கு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட், தன்யா ஹோப் என இரு நாயகிகள் நடித்த தடம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை எழுதி இயக்கியவர் மகிழ் திருமேனி.
தடத்தின் பாஸிட்டிவ் ரிசல்ட்டை கேள்விப்பட்ட பாலிவுட் தயாரிப்பாளர் முராட் கேதானி படக்குழுவிடம் ஒரு திரையிடலுக்காக கேட்டிருக்கிறார். காட்சி முடிந்ததுமே தடத்தின் இந்தி ரீமேக் உரிமையை கேட்டுப் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தியில் தடம் போன்ற க்ரைம் ஆக்‌ஷன் த்ரில்லர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் இந்த படமும் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநரை முடிவு செய்தபின் நடிகர்களை தேர்வு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தடம் முழுக்க சென்னையில் நிகழும் கதையாக உருவாகியுள்ள நிலையில் பாலிவுட்டுக்கு ஏற்றார் போல் வட இந்தியாவின் ஏதாவது ஒரு நகரத்தில் கதை நடைபெறுவது போல் மாற்றியமைக்கப்படவுள்ளது.
பாலிவுட் தயாரிப்பாளர் முராட் கேதானி ஏற்கனவே தெலுங்கில் ஹிட்டடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இந்தி உரிமையை வாங்கி ரீமேக் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.