பாலா அமைக்கும் ஹிட் கூட்டணி!

வர்மா படம் கைவிடப்பட்ட நிலையில் பாலா தனது அடுத்த படத்திற்கான பணிகளில் கவனம் செலுத்திவருகிறார்.

ஜோதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான நாச்சியார் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா இணைந்து நடித்திருந்தனர். ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற அந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா துருவ் விக்ரமை கதாநாயகனாகக் கொண்டு வர்மா படத்தை இயக்கினார். ஆனால் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக இல்லை என்று கருதிய தயாரிப்பாளர் படத்தை கைவிடுவதாக அறிவித்தார். இந்நிலையில் துருவ் கதாநாயகனாக நடிக்க மற்றொரு படக்குழு படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் இயக்கிவருகிறது. இந்தப் படம் ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்யா, அதர்வா என இரு கதாநாயகர்களைக் கொண்டு பாலா புதிய படத்தை இயக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள், அவன் இவன் ஆகிய படங்களில் ஆர்யா நடித்திருந்தார். அதே போல் பரதேசி படத்தில் அதர்வா நடித்து கவனம் பெற்றார். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் அவரும் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

ஆர்யா தற்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் காப்பான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான பூமராங் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. ஹன்சிகாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள 100 திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் மே 3ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.