ஓ.பன்னீர்செல்வம் பிரச்சார வாகனம் கவிழ்ந்து


நீலகிரியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்ய இருந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பிரச்சாரம் செய்வதற்கென முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பிரத்யேகமாக நவீன வசதிகள் கொண்ட பிரச்சார வாகனம் கோவையில் தயாராகியது. பொதுக் கூட்டங்கள் போக மற்ற நேரங்களில் இந்த வாகனங்களில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களில் பேசிவருகிறார்கள்.
சில நாட்களாக கொங்கு மண்டலப் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பன்னீர்செல்வம், நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நேற்று இரவு ஊட்டிக்கு வந்தார். அங்குள்ள சுலைவன் கோர்ட் ஹோட்டலில் தங்கினார். நீலகிரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஏப்ரல் 4) பிரச்சாரம் செய்வதற்காக அறையிலிருந்து கிளம்ப இருந்தார்.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் பிரச்சார வாகனமானது ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் நடுவட்டம் என்ற பகுதியில் திருப்பத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இரு ஓட்டுனர்களுக்கும் உடன் சென்றவர்களுக்கும் சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படும்போது பன்னீர்செல்வம் அந்த வேனில் இல்லை. விபத்தில் வாகனம் சேதமடைந்ததால் சிறிது நேரம் கழித்து மாற்று வாகனத்தில் பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.
ஆன்மீகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவரான பன்னீர்செல்வம், தனது ஒவ்வொரு செயலையும் சாமி கும்பிட்டே ஆரம்பிக்கும் வழக்கம் கொண்டவர். இந்த நிலையில் பிரச்சாரத்திற்கு செல்லும்போது தனது வாகனம் கவிழ்ந்ததை அபசகுனமாகவே நினைக்கிறாராம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.