மன்னாரில் பேர்லின் அம்மா உணவகத்தால் புதிய இலவச வகுப்புகள் ஆரம்பம்.!!

தாயகத்தில் வறுமையில் வாடும் மாணவர்களின்    கல்வியை மேம்படுத்த மன்னாரில் பேர்லின் அம்மா  உணவகத்தால்  புதிய இலவச வகுப்புகள்  ஆரம்பம்.


மடு வீதி , மன்னாரில் வறுமையில் வாடும் மாணவர்களுக்கு  கல்வியை மேம்படுத்த மன்னாரில் பேர்லின் அம்மா உணவகத்தில் புதிய இலவச வகுப்புகள்  ஆரம்பிக்கப்பட்டது. அங்கு உள்ள நான்கு கிராமங்களில்  மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் , தமது பிள்ளைகளை மேலும்  கற்பிக்க கடினத்தில் உள்ளதை அறிந்த மடுறோட் பங்குத்தந்தையின் தலைமையில் பேர்லின் அம்மா உணவகத்தின் முழுமையான நிதி அனுசரணையில் இவ் இலவச வகுப்புகள் சென்ற வாரம் ஆரம்பிக்கப்பட்டது.

100 கும் மேலான மாணவர்கள், பெற்றோர்கள்   இவ் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆர்வத்தை காட்டியுள்ளனர். இம் மாணவர்களுக்கு கணிதம் , தமிழ் , ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் வரலாறு கற்பிக்கப்படும். மாணவர்கள் மீதும் மக்கள் மீதும் உயர்ந்த கரிசனையை செலுத்தி மக்களுக்கான சேவையை முன்னெடுக்கும் பாதர் ரொஷான் அவர்களுக்கு பேர்லின் அம்மா உணவகம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
Powered by Blogger.