உலக வங்கியின் புதிய தலைவராக டேவிட் மெல்பாஸ் நியமனம்!!

உலக வங்கியின் புதிய தலைவராக அமெரிக்க நிதியமைச்சின் உயர் அதிகாரி டேவிட் மெல்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் அனைத்து உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடன் நியமிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது.

அத்துடன், டேவிட் மெல்பாஸ் எதிர்வரும் செவ்வாய்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், டேவிட் மெல்பாஸை அந்தப் பதவிக்குப் பரிந்துரை செய்திருந்தார்.

ஏனைய எந்த நாடுகளும் வேறு எவரையும் உலக வங்கித் தலைமைப் பொறுப்புக்குப் பரிந்துரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.