ஆரோக்கியம் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கை!


அடுத்து வரும் இரண்டு வாரங்களில் சுகாதார ஆரோக்கியம் தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார துறை அமைச்சு கேட்டுள்ளது. விபத்து தவிர்ப்பு பிரிவின் சமூக நல வைத்தியர் சமித்த சிறிதுங்க இதுவிடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார். பாடசாலை விடுமுறை காலம் மற்றும் பண்டிகைக் காலத்தில் ஏற்படக் கூடிய விபத்துக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். வான வெடிகள் மற்றும் பட்டாசுகளை கொழுத்தும் பொழுதும் கூடுதல் அவதானம் தேவை என்று அவர் குறிப்பிட்டார். மதுபோதையில அல்லது அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று டொக்டர் சமித்த சிறிதுங்க மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.