யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன??


யாழ் மாவட்ட ஒருங்கினைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட இன்று (8) திங்கட்கிழமை இடம்பெற்றது.
மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரின் இணைத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன், வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும், திணைக்கள உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன் போது கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.