ஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா? ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி!!

லோக்சபா தேர்தலில் வாக்களித்துவிட்டு திரும்பியபோது, நடிகர் அஜித் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ வைரலாக சுற்றி வருகிறது. கடந்த 18ம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தல் நடைபெற்றது.

அப்போது, அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் காலை 7 மணிக்கே வாக்களித்தார். ஆனால், அஜித் முதலிலேயே வந்ததால், வரிசையில் நிற்காமல் நேராக பூத்துக்குள் சென்று ஓட்டு போட்டு திரும்பியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அஜித் வாக்களித்துவிட்டு வெளியே திரும்பியபோது, அங்கேயிருந்த பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.


கூட்ட நெரிசல்

அடி விழுகிறது

அஜித்துடன் போலீசார், பத்திரிக்கையாளர்கள் என பலரும் சுற்றி வந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதும், நேரடியாக அஜித்தும், ஷாலினியும் வாக்களித்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதில் ஒரு வீடியோ காட்சி ஷாக்கிங்காக உள்ளது. கோபத்தில் கத்தும் பொதுமக்களில் ஒருவர், அஜித்தின் பின்னந்தலையில் ஓங்கி அடிப்பது போன்ற காட்சிதான் அது.

ஆவேசம்

கோபம்

இதன்பிறகு, பூத்துக்கு வெளியே அஜித் வந்தபோதும், ஒரு பெண் அஜித்தை பார்த்து கையை நீட்டி, கோபமாக திட்டுகிறார். அந்த பெண் ஷாலினியையும் தாக்க முற்படுகிறார். இதற்கு நடுவே சாரி சார் என்று போலீசார் கூறும் வார்த்தைகளும் அந்த வீடியோவில் வருகிறது.

அரிது

பொது நிகழ்ச்சி

அஜித் பொதுவாக பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் தேர்தல் ஜனநாயகத்தில் மனைவியோடு அவர் பங்கேற்க முதல் ஆளாக வாக்குப்பதிவு மையம் சென்றார். ஆனால், அங்கு, அவர் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரிப்பு

விசாரணை

அஜித்தை தாக்கியது பொதுமக்களா, அல்லது பொதுமக்கள் போர்வையில் வேறு யாரும் இந்த செயலில் ஈடுபட்டனரா என்று காவல்துறை விசாரித்து வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.