கலெக்டருக்கு பதிலாக நடிகையைக் கலாய்க்கும் புத்திசாலி!!

மக்களவை தேர்தலில் சபரிமலை விவகாரத்தைச் சிலர் ஆயுதமாகப் பயன்படுத்த நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டதால்,சபரிமலை கோவிலின் பெயரால் மத பிரசாரம் மேற்கொள்வது தெளிவான விதிமீறல் ஆகும். எனவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா அதிரடியாக அறிவித்தார்.


இதையடுத்து கேரள மாநிலம் திருச்சூரில் பாஜக சார்பாக போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி சபரிமலை விவகாரம் குறித்தும், ஐயப்பன்  குறித்தும் தொடர்ந்து பேசிவருவதாகப்  பிறகட்சிகள் புகார் செய்தன. இதையடுத்து திருச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா இது குறித்து 48 மணி நேரத்தில் விளக்கமளிக்குமாறு சுரேஷ் கோபிக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு சுரேஷ் கோபியோ, எனக்கு பிடித்த கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை என்னால் ஏற்கமுடியாது. பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். கலெக்டர் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு விளக்கம் அளிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில் ஆட்சியர் அனுபமாவுக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருவதற்கு பதில் நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கு  எதிராக சமூகவலைதளங்களில் கடுமையாக சாடி வருகின்றனர். பின்பு நடிகை அனுபமா அது தான் இல்லை என நிருபித்துள்ளார். நடிகை அனுபமாவுக்கே இந்த கெதி என்றால் உண்மையான ஆட்சியர் அனுபமாவுக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.