மும்பை - அஸ்வின் பரபரப்பு பேச்சு!!

மும்பை இண்டியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக உள்ளூர் வீரர் சித்தேஷ் லேட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பை அணியின் கேப்டனாக பொல்லார்டு செயல்பட்டார்.


பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் காயம் காரணமாக அணிக்கு திரும்பவில்லை. அவருக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், முஜிப் ரஹ்மானுக்கு பதிலாக விஜியோன் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி 4இல் வெற்றி பெற்றிருந்தது. மும்பை அணி 5இல் விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோர், மும்பை கனவை சிதறடித்தனர். 100 ரன்களை கடந்தும் விக்கெட்டை பறிகொடுக்காமல் இருவரும் சிறப்பாக விளையாடினர். பின்னர் அணியின் ஸ்கோர் 116 ரன்களாக இருக்கும்போது, கெயில் 63 (36) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினார்.


ஆனால் மறுபுற டேவிட் மில்லர் 7 (8), கருன் நாயர் 5 (6), சாம் குரான் 8 (3) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ராகுல் அசத்தலாக 62 பந்துகளில் சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது.

அடித்து களமிறங்கிய கடின இலக்கை துரத்திய மும்பை அணிக்கு நல்ல துவக்கமாக இருந்தாலும், வீரர்கள் தொடர்ச்சியாக ஆட்டமிழக்க ஒரு கட்டத்தில் சரிவை சந்தித்தது. பின்னர் பொல்லார்ட் அதிரடியில் இறங்கினார். அவர் சிறிது நேரம் பாண்டியா காய் கொடுத்தார். பின்னர் அவரும் ஆட்டமிழக்க தோல்வியை தழுவி விடுமோ? என்ற எண்ணம் வர.. அணியை சிக்ஸர் மழைகளாக பொழிந்து மீட்டு எடுத்தார்.


இறுதி ஓவரில் 15 தேவைப்பட்ட நிலையில், முதல் சிக்ஸர் மற்றும் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விளாசி மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். இறுதி பந்தில் 2 ரன்கள் தேவைபட அல்சாரி அற்புதமாக எடுத்து கொடுத்து வெற்றி பெற செய்தார்.மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் பொல்லார்ட்.

இந்த தோல்வி குறித்து அஸ்வின் கூறுகையில்,அன்கிட் ராஜ்பூட்) முதல் ஓவரில் தனது விரலை காயப்படுத்தினார். ஆனாலும் பவர் பிளே ஓவர்களில் அற்புதமாக பந்துவீசினார். நாங்கள் நிறைய ஓவர்களில் 10 ரன்களுக்கு மேல் கொடுத்தோம். கேட்ச் தவற விடுவதை நாங்கள் நிச்சயம் சரி செய்யவேண்டிய ஒன்று, அதை சரியாக செய்திருந்தால், இன்று ஆட்டம் எங்களுடையது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.