சீமானுக்கு ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு முக்கிய நபரிடம் இருந்து ஆதரவு..!? ஆஷ்லி!!

ஆஸ்திரேலிய மனித உரிமை  , ஆண் பெண் சமத்துவம் , சூழலியல் பொருளாதாரம் சார்ந்த துறைகளில் சேவை செய்து வரும் பெண்மணி ஆஸ்லி நியூஹம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் ஏன் தமிழக மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என விவரித்து காணொளி ஒன்றை உருவாக்கி உள்ளார். இது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது .


அவர் கூறியிருப்பதாவது..

அனைத்து தமிழ் மக்களுக்கும் வணக்கம் . எனது பெயர் ஆஷ்லி . நான் ஒரு ஆஸ்திரேலிய பெண்மணி. நான் மனித உரிமை  , ஆண் பெண் சமத்துவம் , சூழலியல் சார்ந்த துறைகளில் சேவை செய்து வருகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் ஏன் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பேசவே இந்த காணொளியை உருவாக்குகிறேன். என்னுடைய நண்பர் ஜீவா டானிங் வழியாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை கடந்த மார்ச் 2019 இல் சந்தித்தேன் . அவருடைய கொள்கைகள் மற்றும் தமிழ்  மக்கள் மீதான அவரது அக்கறை, பேரார்வம்  குறித்து வியப்படைந்து  ஈர்க்கப்பட்டேன்.  ஆஸ்திரேலிய பெண்மணியான  நான் ஏன் தமிழக கட்சி குறித்து பேச வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். ஏன் என்றால் நாம் தமிழர் கட்சியின் அரசியல் உலக சூழலியலிலும்  தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். சீமான் அவர்களுடைய  ஆண்-பெண் சமத்துவ கொள்கைகள் ஆஸ்திரேலிய நாட்டில் இருக்கும் ஆண்-பெண் சமத்துவ கொள்கைகளை விட சிறந்ததாக இருக்கிறது. வருகிற தேர்தலில் நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற வேட்பாளர்களில்  50 சதவீதம் பேர் பெண்கள் என்பது எனக்கு ஒரு பெண்ணாக  உற்சாகம் தருகிறது.  நாம் தமிழர் கட்சி ஆட்சியின் செயல் திட்ட வரைவில் குடுக்க பட்ட அருமையான  திட்டங்கள்  உத்வேகம் அளிப்பது மட்டுமல்லாமல்  அது  தமிழக மக்களையும்,  மேலும் ஒட்டு மொத்த இந்தியாவையுமே வளர்ச்சி அடைய செய்யும் திட்டங்கள் ஆகும்.   சீமான் அண்ணா உருவாக்கிய மெத்த படித்த நிபுணர் குழு அடுத்த தலைமுறைக்கு என்ன தேவை என்பதை அறிந்து அருமையான   இந்த செயல் திட்ட வரைவை உருவாக்கி உள்ளது.  அனைவருக்கும் சரியான சமமான தரமான கல்வி, மருத்துவம், நீர் மேலாண்மை திட்டம், விவசாயிகளுக்கு குறைந்த மாத வருமானம் ரூபாய் 20,000 ஆக பெருக்கும் திட்டங்கள்,  மீனவர்களுக்கான வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்கள் உட்பட்ட  சிறந்த திட்டங்கள்  அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை தேடித்தரும்.  பல கோடி பனை திட்டம், பத்தாண்டு பசுமை திட்டம் போன்ற சூழலியல் திட்டங்கள் தமிழ்நாட்டின் பசுமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும். இளம் விஞ்ஞானிகளின் சிறந்த  கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் மாவட்டம் தழுவிய தொடக்கநிலை ஆய்வு மையம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி  பல்வேறு தொழில்  மற்றும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும். நாம் தமிழர் கட்சியின் பசுமை பொருளாதார திட்டங்கள் ஒவ்வொரு கிராமங்களையும் வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்லும்.  நான் உங்கள் ஒவ்வொருவரையும் நாம் தமிழர் கட்சி ஆட்சியின் வரைவு திட்டத்தை படிக்க www.makkalarasu.in பரிந்துரைப்பது மட்டுமல்லாமல் மாற்றத்திற்காக விவசாயி சின்னத்தில்  வாக்களிக்க கேட்டு கொள்கிறேன் . நாம் தமிழர் கட்சிக்கும் , சீமான் அண்ணாவுக்கும் வாக்களிப்பது என்பது , சிறந்த வருங்காலத்திற்காக வாக்களிப்பது மட்டுமல்லாமல் அது நாம் வாழும் பூமிக்கும் , அதில் வாழும் அனைத்து உயிர்களுக்குமான வாக்காகும். நன்றி

No comments

Powered by Blogger.