தேடப்பட்டு வந்த குண்டு நிரம்பிய சரக்குந்து கைப்பற்றப்பட்டுள்ளது!

வெடிபொருள் பொருத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த லொரி, கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.



DAE-4197 என்ற இலக்கமுடைய  JAC ரக  லொறி கொழும்பு - கொட்டாஞ்சேனையில் வைத்து, கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுமினியக் கவசமிடப்பட்ட  குறித்த லொறியுடன் வேன் ஒன்றும் நேற்று முன் தினத்திலிருந்து தேடப்பட்டு வந்தன.

இந்த நிலையிலேயே தற்போது, தேடப்பட்டு வந்த லொரி கைப்பற்றப்பட்டுள்ளது.

அதேவேளை, கைப்பற்றப்பட்டுள்ள லொறிக்குள் எந்தவொரு வெடிபொருளும் இருக்கவில்லையெனவும் காவல்துறையினர் கெப்பிட்டல் நியூஸுக்கு தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.